அ.ம.மு.க.வின் ஒரே சட்டப்பேரவை உறுப்பினரான காமராஜை அக்கட்சியிலிருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார் தினகரன்.
முன்னதாக, த.வெ.க. ஆட்சி அமைப்பதற்கு காமராஜ் ஆதரவு அளித்தார் என்றும் அவர் கடிதம் அளித்தார் என்றும் தகவல்கள் வெளியாகின.
அதை மறுத்து அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் அக்கடிதமே போலியானது என்று கூறி ஆளுநர் அர்லேகரிடம் அவரைக் கூட்டிச்சென்று சந்தித்தார்.
இந்த நிலையில், இன்று சட்டப்பேரவையில் பேசிய காமராஜ், த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவு தருவதாகப் பேசினார்.
அதைத் தொடர்ந்து, சற்றுமுன்னர் தினகரன் வெளியிட்ட அறிவிப்பில், காமராஜை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாகக் கூறியுள்ளார்.