தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைதுசெய்யப்பட்டதன் பின்னணி பரபரப்பாகியுள்ளது.
பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் முறைகேடு, பள்ளிக் கட்டடங்களுக்கான திட்ட அனுமதி எனப் பலவகைகளில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் இலஞ்சம் பெற்றதாக அன்பில் மகேஸ் உட்பட பலரின் மீது வழக்கு பதியப்பட்டது.
இதில், தனியார் பள்ளிகள் சங்கத்தை நடத்திவரும் முன்னாள் பா.ஜ.க. பிரமுகரும் பின்னர் தி.மு.க.வுக்குத் தாவியவருமான அரசகுமார் முக்கிய புள்ளியாகச் செயல்பட்டுள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன், அன்பில் மகேஸ் தொடர்பான இடங்களிலும் தேடுதல் சோதனைகள் நடத்தப்பட்டன. அவரின் மைத்துனர் வாளாடி கார்த்தி என்ற நெட்டை கார்த்தியும் இதில் சிக்கியுள்ளார்.
மற்றவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில், மகேஸ் தரப்பு மீது உறுதியான குற்றச்சான்றுகள் உள்ளதாக ஊழல் தடுப்புத் துறை உயர்நீதிமன்றத்தில் நேற்று அழுத்தமாக வாதிட்டது. அதையடுத்து அவர் கைதுசெய்யபப்ட்டார்.
முன்னதாக, முன்னாள் அமைச்சரைக் கைதுசெய்ய ஆளுநர் அனுமதி அளிக்கவேண்டும் என்பது சிக்கலான நிலையில், தி.மு.க. தரப்பில் ஆளுநரின் அனுமதி வலியுறுத்தப்பட்டது. விசாரணையில், தி.மு.க.வின் கொள்கையில் ஆளுநர் எல்லாம் ஒரு பொருட்டே இல்லையே என கமெண்டும் அடிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆளுநர் தரப்பு சிக்னலும் கிடைக்கவே மகேஸ் கைது அரங்கேறியிருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.