தமிழ் நாடு

அன்புச்சோலை- 25 முதியோர்ப் பராமரிப்பு மையங்கள் திறப்பு!

Staff Writer

அன்புச்சோலை எனும் பெயரில் தமிழக அரசின் சமூகநலத் துறை சார்பில் முதியோர் பகல்நேரப் பராமரிப்பு மையங்கள் உருவாக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவந்தன. இந்தத் திட்டத்தின்படி 10 மாநகராட்சிகளில் தலா இரண்டு மையங்கள், சென்னை பெருநகராட்சியில் மூன்று, தொழில் பகுதிகளான கிருஷ்ணகிரி, இராணிப்பேட்டையில் தலா ஒரு மையம் என மொத்தம் 25 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

திருச்சி, பொன்மலையில் அமைக்கப்பட்டுள்ள அன்புச்சோலை மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நேரடியாகத் திறந்துவைத்தார். 

மற்ற இடங்களில் உள்ள மையங்களைக் காணொலிமூலம் அவர் திறந்துவைத்தார்.