கோவை விமான நிலையத்தில் அன்புமணி 
தமிழ் நாடு

அ.தி.மு.க. சுய ஆய்வு செய்துகொள்ள வேண்டும் - அன்புமணி

Staff Writer

ஐந்து மாதங்களுக்கு முன்னர் வெற்றிபெற்ற தொகுதிகளில் மூன்றாமிடத்திற்குத் தள்ளப்பட்டது குறித்து அ.தி.மு.க. சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் இன்று காலையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் கூறியதாவது:

"நீண்ட நாள்களுக்குப் பிறகு, தமிழகத்தில் ஜனநாயகரீதியாக இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது. கடந்த கால இடைத்தேர்தல் எல்லாம், எடைத்தேர்தலாக அதாவது மக்களை ஆடு, மாடுகள் போல அடைத்துவைத்து பணம், மது கொண்டு வெற்றி பெற்ற கட்சிகள் எல்லாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால், இந்த முறை பிரச்சாரம் செய்து அனைத்துக் கட்சிகளும் ஜனநாயக முறையில் போட்டியிட்டார்கள். இதில் ஆளுக்கட்சி பெற்ற வெற்றி, அந்தக் கட்சிக்கு பலத்தைக் கொடுக்கிறது.

அதேவேளையில், தமிழகத்தை அதிக ஆண்டுகள் ஆண்டு, ஐந்து மாதங்களுக்கு முன்னர் இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அ.தி.மு.க., தற்போது ஏன் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்று சுய ஆய்வு மேற்கொள்வது அவசியம். இன்று தமிழகத்தில் பல்வேறு பிரச்னைகள் மக்கள் மத்தியில் உள்ளன. அவற்றில் தமிழக அரசு கவனம்செலுத்த வேண்டும்." என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram