அன்புமணி 
தமிழ் நாடு

தி.மு.க.வின் நிலையை அறிய காங்கிரசின் அழுத்தம்தான் எம்.பி.கள் கூட்டம் - அன்புமணி

Staff Writer

தொகுதி மறுசீரமைப்பு மசோதா குறித்த முதலமைச்சர் விஜய் தலைமையிலான கலந்தாய்வுக் கூட்டத்தை பா.ம.க.வும் புறக்கணிக்கிறது.

இதுகுறித்து, பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியுள்ளதாவது:

"மேகதாது பிரச்னைக்காக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டாத முதல்வர், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கலந்தாலோசிக்க எம்.பி.கள் கூட்டத்தைக் கூட்டுகிறார்.

தமிழ்நாட்டின் மையப் பிரச்னை மேகதாது-காவிரி பிரச்னை. இது தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்னை ஆகும். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான மசோதா குறித்து, மத்திய அரசு எதுவும் தெரிவிக்காத நிலையில், இதுதொடர்பாக எம்.பி.கள் கூட்டத்தைக் கூட்டுவதன் தேவை என்ன?

எம்.பி.களை மட்டும் அழைக்காமல், அனைத்துக் கட்சிகளையும் அழைத்து விவாதம் நடத்த வேண்டும்.

தி.மு.க.வின் நிலைபாட்டை அறிந்து கொள்ள காங்கிரஸ் கட்சி கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே, இ்ந்த எம்.பி.கள் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது எங்களின் கருத்து மட்டுமல்ல. பொது அரசியல் தெரிந்தவர்களின் கருத்து.

சட்டப்பேரவையில் இதற்கென தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தால் போதுமா?

சட்டப் போராட்டங்கள் தொடர்பாக அனைத்துக் கட்சிகளையும் அழைத்து அவர்களின் கருத்துகளைக் கேட்க வேண்டும்." என்று அன்புமணி கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram