பள்ளிக்கரணை சதுப்பு நிலம் 
தமிழ் நாடு

பள்ளிக்கரணை சதுப்பு நிலம்- உலக வங்கித் தலைவருக்கு அன்புமணி கடிதம்!

Staff Writer

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சீரழிக்கும் நெய்தல் மீட்சி இயக்க முறைகேடுகள், பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று உலக வங்கித் தலைவருக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி கடிதம் அனுப்பியுள்ளார். 

இது தொடர்பாக உலக வங்கியின் தலைவர் அஜய் பங்காவுக்கு மருத்துவர் அன்புமணி கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தின் நகல்கள் உலக வங்கியின் இந்திய இயக்குனர் (பொறுப்பு) பால் புரசீ, உலக வங்கியின் இந்திய தலைமை பொருளாதார வல்லுனர் ஓரிலீன் குரூஸ் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

”தமிழ்நாட்டின் கடலோரப் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்புக்காக உலக வங்கி கடனுதவியுடன் 2025&ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் நெய்தல் மீட்சி இயக்கத்தின் கீழ் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 10 அடி உயர தடுப்புச் சுவர் மற்றும் நடைபாதை அமைக்கும் திட்டத்திற்கான நிதியில் முறைகேடுகள் நடைபெறுவது குறித்தும், இந்தத் திட்டத்தால் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பாதுகாக்கப்படுவதற்கு பதிலாக ஆக்கிரமிக்கப்படும், சீரழிக்கப்படும் வாய்ப்புகள் அதிகரித்திருப்பது குறித்தும் உலக வங்கி விசாரணை நடத்த வேண்டும்.” என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.