அந்திமழை இதழின் நிறுவன ஆசிரியரும் பதிப்பக உரிமையாளருமான இளங்கோவன் மறைவுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பு:
" அந்திமழை இதழின் நிறுவன ஆசிரியரும் பதிப்பாளருமான இளங்கோவன்(55) நம்மை விட்டுப் பிரிந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.
கால்நடை மருத்துவம் பயின்றவர் இதழியல் துறையில் ஆர்வமாகவும் தீவிரமாகவும்செயலாற்றியது குறிப்பிடத்தக்கது.
அந்திமழை இதழ், நாட்குறிப்பேடு, நூல் வெளியீடு என்று எழுத்தாளர்களுடன்நெருக்கமான உறவைப் பேணுகிற இதழாக வெளிவந்து கொண்டிருந்தது.
கரன்சி காலனி, ஊர் கூடி இழுத்த தேர் ஆகிய நூல்களையும் எழுதியவர். மிகச்சிறந்தஇலக்கியப் பணியை ஆற்றிச் சென்றிருக்கும் அவரின் பிரிவு அச்சு ஊடகத்திற்குப் பேரிழப்பாகும்.
அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும் உறவினர்களுக்கும்படைப்பாளிகளுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்."