அந்திமழை இதழ் சார்பாக ஆண்டுதோறும் நடத்தப்படும் சிறுகதைப் போட்டி இளையோர் சிறுகதைப் போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பரிசு ரூ 10,000, இரண்டாம் பரிசு ரூ.5000, மூன்றாம் பரிசு ரூ 3000. மீதித் தொகை ஆறுதல் பரிசு பெறுகிறவர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படும். கதைகள் வந்து சேரவேண்டிய இறுதி நாள்: 10-03-2026
· போட்டியின் விதிமுறைகள்:
· இந்த ஆண்டு 40 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியாக இது மாற்றி அறிவிக்கப்படுகிறது. இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்துவதே நோக்கம்.
· சிறுகதை சொந்தக் கற்பனைதான் என்பதற்கு உறுதிமொழிக் கடிதம் வேண்டும். அது இல்லாத கதைகளைப் பரிசீலிக்க இயலாது.
· சிறுகதை எந்தக் கருவை மையப்படுத்தியும் அமையலாம்.
· ஒருவர் ஒரு கதையை மட்டுமே அனுப்ப வேண்டும். கதை, ஆயிரம் முதல் இரண்டாயிரம் சொற்களுக்குள் இருக்கவேண்டும்.
· சமூக ஊடகத்திலோ இணையதளங்களிலோ இதற்குமுன் வெளியாகி இருக்கக்கூடாது.
· ஜூன் மாத இதழில் முடிவுகள் வெளியாகும்.
· கதைகள் தட்டச்சு செய்யப்பட்டு ஒருங்குறி (Unicode) எழுத்துருவில் editorial@andhimazhai.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படவேண்டும்.
· எழுத்தாளரின் முழு முகவரி, தொலைபேசி எண்ணைக் குறிப்பிட வேண்டும்.
· பரிசுக்குரிய கதைகளை நடுவர் குழு பரிசீலித்துத் தேர்ந்தெடுக்கும். அந்திமழை ஆசிரியர் குழு ஆலோசனையுடன் எடுக்கப்படும் முடிவே இறுதியானது.
· போட்டிக்கு அனுப்பப்பட்ட கதைகளை முடிவுகள் வெளியாகும்வரை வேறு இதழுக்கோ, இணையதளத்துக்கோ, சமூக ஊடகத்துக்கோ வெளியிட அனுப்பக் கூடாது.
· முடிவுகள் வெளியாகும்வரை போட்டி தொடர்பாக கடிதங்கள், தொலைபேசி, மின்னஞ்சல் விசாரிப்பு மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டுகிறோம்.