அனிருத் - காவ்யா மாறன் திருமணம் 
தமிழ் நாடு

"என் வாழ்நாள் முழுவதுக்குமான தருணம்.11.11"... அனிருத் - காவ்யா மாறன் திருமணம்!

ம.தினோவிகா

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று கூறுவார்கள். அதுபோல, இங்கே நிஜமாகவே சொர்க்கத்தில் நடந்துபோல் உள்ளது கிரீஸ் நாட்டில் நடந்த அனிருத் - காவ்யா திருமணம்!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்தருக்கும், சன் டிவி நெட்வொர்க்கின் நிர்வாக இயக்குநராகவும், ஐ.பி.எல். கிரிக்கெட் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சி.இ.ஓ.வாக இருக்கும் காவ்யா மாறனுக்கும் நேற்று கிரீஸ் நாட்டில் திருமணம் நடைபெற்றது.

அனிருத் - காவ்யா மாறன் திருமணம்

இந்தத் திருமணத்தில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

திருமணத்தில் கலந்துகொண்ட முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த்

திருமணத்திற்கு பின்பு இருவரும் இணைந்திருக்கும் படத்தை தனது சமூக ஊடகப் பக்கமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட அனிருத், "என் வாழ்வில் ஒருமுறை மட்டும் வரும், வாழ்நாள் முழுவதுக்குமான தருணம். 11. 11" என்று பதிவிட்டுள்ளார்.

"என் வாழ்வில் ஒருமுறை மட்டும் வரும், வாழ்நாள் முழுவதுக்குமான தருணம். 11. 11 "

இதில் அனிருத் தந்த நிறத்திலான வேஷ்டியும், குர்தாவும் அணிந்துள்ளார். காவ்யா மாறன் முழுமையான எம்பிராய்டரி, பளபளப்பான சீக்வின் எனப்படும் சிறிய வட்ட வடிவத் தகடுகள், மணிகளைத் துணிகளில் கோர்த்து அலங்கரிக்கப்பட்ட நுணுக்கமான வேலைப்பாடுகள் அடங்கிய இளஞ்சிவப்பு நிற லெஹங்காவும் அணிந்துள்ளார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ராம்குமார் கணேசனை, தலைமறைவாக இருக்கும் தொழிலதிபர் விஜய் மல்லையா என்று பரவிய புகைப்படம்

இவர்களின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றின் பின்னணியில் இருந்த விருந்தினர் ஒருவர் தலைமறைவாக இருக்கும் தொழிலதிபர் விஜய் மல்லையாவா என்று சமூக ஊடகங்களில் வைராலாக பரவியது. ஆனால், உண்மையில் அது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும், புகழ்பெற்ற நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகனுமான ராம்குமார் கணேசன் என்பது பின்னர் தெரியவந்தது.

வைரலான புகைப்படம்

திருமணத்தைத் தொடர்ந்து, வரும் நவம்பர் 21ஆம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. முன்னதாக, சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன், காவிரி தம்பதியர் பல்வேறு முக்கிய பிரபலங்கள், பிரதமர், தென்மாநில முதல்வர்கள் ஆகியோருக்கு வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலான நிலையில், தற்போது இவர்களின் திருமணப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

தென்மாநில திருமண வரவேற்பிதழ் வழங்கப்பட்டது.

மேலும், அனிருத் - காவ்யா மாறனின் திருமணத்தின் கேட்டரிங் குறித்தும் சமூக ஊடகங்களில் பரவின. தொழிலதிபர் அம்பானி உட்பட பிரபல தொழிலதிபர்களின் திருமண நிகழ்ச்சிகளில் கேட்டரிங் செய்த அறுசுவை அரசு கேட்டரிங் நிறுவனமே, இவர்களின் திருமணத்திலும் தென்னிந்திய சைவ விருந்தினை விருந்தினர்களுக்கு வழங்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அறுசுவை அரசு கேட்டரிங்

இனிதே நிறைவடைந்த அனிருத் - காவ்யா மாறனின் திருமணத்தில் கலந்துகொண்ட விருந்தினர்கள் முதல் நடைபெற்ற இடம், பரிமாறப்பட்ட உணவு, அலங்கரிக்கப்பட்ட திருமண உடை என இவர்களின் திருமணத்தில் அனைத்துமே வைரலான நிலையில், சென்னையில் நடைபெறவுள்ள இவர்களின் திருமண வரவேற்புக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram