பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை 
தமிழ் நாடு

புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை... பா.ஜ.க.விலிருந்து விலகல்!

Staff Writer

தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். இதற்கான கடிதத்தை அவர் முறைப்படி கட்சியின் அகில இந்தியத் தலைவர் நிதின் நபினிடம் வழங்கியுள்ளார். 

அதையடுத்து, மைய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தில்லியில் இன்று முற்பகலில் அண்ணாமலை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது என தில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே, கடந்த சில நாள்களாகவே அண்ணாமலை தொடங்குவுள்ள புதிய கட்சியின் கொடி, சின்னம் என சமூக ஊடகங்களில் பரவலாகி வருகின்றன. ஜூன் 4ஆம் தேதி அண்ணாமலையின் பிறந்த நாள் என்பதால் அன்று அவர் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் தகவல்கள் பரவியுள்ளன.