த.வெ.க. அரசின் 'அண்ணன் சீர்' திட்டத்திற்கு, கடந்த அக்டோபர் 5ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி வரையிலான திருமணங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் குறித்து சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்:
" 'அண்ணன் சீர்' திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரும்புவோர் அருகிலுள்ள அரசு இ-சேவை மையங்கள் அல்லது தமிழ்நாடு அரசு இ-சேவை இணையதளமான https://www.tnesevai.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
திருமணத்திற்கு 60 நாள்களுக்கு முன்பிருந்து, திருமண நாள் வரை விண்ணப்பிக்கலாம். 5.10.2026 முதல் 15.1.2027 வரை நடைபெறும் திருமணங்களுக்கு 15.1.2027 வரை விண்ணப்பிக்கலாம்.
‘அண்ணன் சீர்’ திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான அடிப்படைத் தகுதிகள்:
1. திருமணத்தின் போது மணமக்கள் சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட திருமண வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
2. விண்ணப்பதாரரின் (அதாவது மணப்பெண்) குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட குடும்ப அட்டையில் மணமகளின் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கு தனித்துவமான விண்ணப்ப எண் வழங்கப்படுவதுடன், விண்ணப்பத்தின் நிலை குறித்த தகவல்கள் குறுஞ்செய்தி, வாட்சாப், மின்னஞ்சல் வாயிலாகத் தெரிவிக்கப்படும். திருமணம் நடைபெற்ற 15 நாட்களுக்குள் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும்." என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.