முன்னாள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா தி.மு.க.வில் சற்று முன்னர் இணைந்துள்ளார்.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் அன்வர் ராஜா தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டுள்ளார்.
இந்த இணைப்பின் மூலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் இசுலாமியர் வாக்குகளை தி.மு.க. தன் பக்கம் திருப்ப முயல்கிறது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
அ.தி.மு.க.வில் அமைச்சராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் என்பதால், அவருக்கு இங்கு உயர் பதவி வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.