அப்பாவு 
தமிழ் நாடு

இன்பதுரையின் தேர்தல் வெற்றி செல்லாது- அப்பாவு வழக்கில் தீர்ப்பு

Staff Writer

அ.தி.மு.க. முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஐ.எஸ்.இன்பத்துரையின் தேர்தல் வெற்றி செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பை அளித்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நெல்லை மாவட்டம் இராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் ஐ.எஸ். இன்பதுரை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரும் ஐந்து ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராகவும் செயல்பட்டார்.

அவரின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரை எதிர்த்து போட்டியிட்ட அப்பாவு வழக்கு தொடுத்தார்.

அதில்தான் இன்று தீர்ப்பு வெளிவந்துள்ளது.

முன்னாள் சபாநாயகர் அப்பாவு 104 தபால் வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்பதுரை தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் நிலையில், அவரைத் தகுதிநீக்கம் செய்வது என இல்லாமல், சட்டப்பேரவை உறுப்பினருக்கான ஓய்வூதியப் பலன்கள் மட்டும் கிடைக்காது என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.