பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் நியமனத்திற்கு எதிராக வழக்கு  
தமிழ் நாடு

பொறுப்பு டிஜிபி நியமனம் – தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

Staff Writer

தமிழ்நாடு பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஹென்றி திபேன் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.

தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், வெங்கட்ராமன் நியமனம் தொடர்பாக தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் சமூக ஆர்வலர் ஹென்றி திபேன் தொடர்ந்துள்ளார். மாநில டிஜிபி நியமனங்களில் பொறுப்பு என்ற பதவியை பயன்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே ஒரு வழக்கில் உத்தரவிட்டு இருப்பதாகவும், எனினும் நீதிமன்றம் அவமதிக்கும் விதமாக பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் என்பவரை தமிழக அரசு நியமித்துள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை, தவெக நிர்வாகி அருண்ராஜ் உள்ளிட்டோர் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்த நிலையில்தான் உச்சநீதிமன்றத்தில், அவமதிப்பு வழக்கு இவ்விவகாரத்தில் தாக்கலாகியுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.