நயினார் நாகேந்திரன் 
தமிழ் நாடு

ரூ.100 கோடி கோயில் நிலம்... நயினார் மகன் மோசடி: அறப்போர் இயக்கம் கேள்வி!

Staff Writer

விஜய் அரசாங்கம் கோயில் நிலத்தை தனிநபர்களுக்குத் தாரைவார்ப்பதாக நயினார் நாகேந்திரன் சாடியிருந்த நிலையில், அவரின் மகன் மீது கோயில் நில மோசடி வழக்கு என்ன ஆயிற்று என அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து அந்த இயக்கம் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு:

”மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தை மோசடியாக ஆட்டையைப் போட்ட இளையராஜா என்ற மோசடி பேர்வழி உதவியோடு, தி.மு.க. ஆட்சியில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள 100 கோடி மதிப்பிலான நிலத்தை அன்றைய நெல்லை MLA நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி நெல்லையில் ஒப்பந்த பத்திரப்பதிவு செய்து மோசடி செய்தது எப்படி?

அறப்போர் இயக்கம் புகார் அளித்து அந்த ஒப்பந்த பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்ட பிறகும் இளையராஜா, நயினார் பாலாஜி மீது இதுவரை எப்ஐஆர் போடப்படாதது ஏன்?

தி.மு.க. ஆட்சியில்தான் வழக்கு இல்லை; த.வெ.க. ஆட்சியில் இந்தப் பத்திரப்பதிவு மோசடிப் பேர்வழிகள் மீது வழக்கு பாயுமா?” என்று அறப்போர் இயக்கம் கேட்டுள்ளது.