சட்டப்பேரவையில் இன்று முன்வைக்கப்பட்ட விஜய் அரசாங்கத்தின் முதல் நிதிநிலை அறிக்கையில், சட்டப்படி உரிய நேரத்தில் அனைவருக்கும் சேவைகள் கிடைக்கும் பொருட்டு, சேவைகள் உரிமைச்ச்சட்டம் வடிவமைக்கப்பட்டு இயற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் உரிமை ஆர்வலர்கள், தன்னார்வ குடிமைச் சமூக செயற்பாட்டாளர்களின் கோரிக்கை இதன்மூலம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.
இதை வரவேற்றுள்ள அறப்போர் இயக்கம், “ தமிழ்நாடு அரசின் இன்றைய பட்ஜெட் செய்தி - சேவை பெறும் உரிமை சட்டம் கொண்டு வருவோம் - வரவேற்கிறோம்! இதற்காக அறப்போர் தயாரித்த மாதிரி சட்ட வரைவையும் அரசுக்கு அனுப்பி வைக்கிறோம் ! மக்களுடைய கருத்துக்களையும் கேட்டு வலுவான சட்டமாகவும், செயல்படும் சட்டமாகவும், லஞ்சத்தை ஒழிக்கும் சட்டமாகவும், தன்னிச்சையாக இயங்கும் சேவை ஆணையத்துடன் கூடிய சட்டமாகவும் கொண்டு வரப்பட வேண்டும்!” என்று கூறியுள்ளது.