தமிழகத்தில் தனியார் நிறுவனத்தின் ஆரோக்யா பிராண்டு பால் விலை நாளைமுதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரை லிட்டருக்கு இரண்டு ரூபாயும் ஒரு லிட்டருக்கு மூன்று ரூபாயும் விலை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலுக்கு மட்டுமின்றி தயிர் போன்ற பால் உபபொருட்களுக்கும் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைப்போல மற்ற தனியார் பால் நிறுவனங்களும் விலையை உயர்த்தும் எனக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஏற்கெனவே பால் உற்பத்தியாளர்கள் தரப்பில் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், புதிய அரசு வந்ததும் அது பரிசீலிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனியார் பால் நிறுவனத் தரப்பில் விற்பனை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.