டிராட்ஸ்கி மருது 
தமிழ் நாடு

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவுக்கு 'இயல்' விருது !

Staff Writer

தமிழகத்தின் மூத்த ஓவியரும், திரைப்பட நகர்படக் கலைஞருமான டிராட்ஸ்கி மருது, 2025ஆம் ஆண்டுக்கான 'இயல்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'தமிழ் இலக்கியத் தோட்டம்', ஆண்டுதோறும் தமிழ் மொழி, இலக்கியம், கலைத் துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய ஆளுமைகளுக்கு இந்த உயரிய விருதை வழங்கி வருகிறது. இந்நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான விருதுக்கு டிராட்ஸ்கி மருது தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த விருது வரும் செப்டம்பர் மாதம் கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளது. விருதுடன் பாராட்டுச் சான்றிதழ், பரிசுத் தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த டிராட்ஸ்கி மருது, நவீன ஓவியம், விளக்கப்படங்கள், திரைப்படக் கலை இயக்கம், கணினி வரைகலை உட்பட்ட துறைகளில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக சிறப்பான பங்களிப்பை வழங்கிவருபவர்.

அவரது கலைப் பணியைப் பாராட்டி வழங்கப்படும் இந்த விருது, தமிழ்க் கலை உலகிற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளதாகப் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram