நெல்லை சாந்தி ஸ்வீட்ஸ் கடை 
தமிழ் நாடு

அல்வா பிரியர்களுக்கு இனிக்காத செய்தி!

Staff Writer

நெல்லையில் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக கடைகளில் அல்வா உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரபல சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா நிறுவனத்தில் இன்று மதியத்துடன் தயாரிப்பை நிறுத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரால் இந்தியாவுக்கு வரும் எரிபொருள் தடைப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏறபட்டுள்ளது.

ஏற்கெனவே வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் விநியோகத்துக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் பெரும்பாலான ஹோட்டல்கள், டீக்கடை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சிலிண்டர் ஏழாயிரம் ரூயாப் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், உலகப் புகழ்பெற்ற திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அல்வா, பால்கோவா தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரபல சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா நிறுவனத்தில் இன்று மதியத்துடன் தயாரிப்பை நிறுத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

சிலிண்டருக்கு மாற்றாக விறகு அடுப்பு மூலம் அல்வா உள்ளிட்ட இனிப்பு வகைகளை தயாரிக்கும் பணிகளை விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டு வருவதாக கடையின் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.