தேர்தல் பிரச்சாரத்தின்போது த.வெ.க. தலைவர் விஜய் பெயிண்ட் அடிக்கப்பட்ட புறாவைப் பறக்கப்பட்டது தொடர்பாக பிரச்னை எழுந்துள்ளது.
விலங்கு நல அமைப்பு பீட்டாதான் இதுகுறித்து சிக்கலை எழுப்பியுள்ளது.
அண்மையில் திருச்சியில் நடைபெற்ற பிரச்சார நிகழ்ச்சியில், வேனில் இருந்தபடி புறாக்களைப் பறக்கவிட்டார். அதில் ஒரு புறாவில் த.வெ.க. கட்சிக் கொடியின் நிறம் பூசப்பட்டிருந்தது கவனத்தை ஈர்த்தது.
அதே சமயம், எதிர்மறையாகவும் சிக்கலைக் கொண்டுவந்துள்ளது.
பீட்டா அமைப்பு சார்பில் இதைப்பற்றி விஜய்க்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் விதிப்படி பிரச்சாரத்தில் விலங்குகளைப் பயன்படுத்தக்கூடாது என்பதைச் சுட்டிக்காட்டி, இனி வரும் காலத்தில் இப்படியான நிகழ்வுகள் நடக்காமல் தவிர்க்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.