சென்னையில் நடைபெற்று முடிந்த பத்திரிகையாளர் மன்ற புதிய நிருவாகிகளுக்கு பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன் சமூக ஊடகத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவு :
”தமிழக ஊடகத் துறையில் முக்கியமான அமைப்பான சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தேர்தல், 25 ஆண்டுகளுக்குப் பிறகு, அமைதியான முறையில் நடைபெற்று, புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகளுக்கு பா.ஜ.க. சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய நிர்வாகிகள் தலைமையில், ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகவியலாளர்கள், விருப்பு வெறுப்பின்றி, தமிழக மக்களின் குரலாக ஒலிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என்று அண்ணாமலை கூறியுள்ளார்.