நடிகை குஷ்பு 
தமிழ் நாடு

ஆட்டு மந்தையில் பா.ஜ.க.வினர் அடைப்பு!

Staff Writer

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்டு பேரணி நடத்த முயற்சித்து கைது செய்யப்பட்ட பா.ஜ.க.வினர் ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் அடைக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, பா.ஜ.க. மகளிர் அணியின் நீதி கேட்பு போராட்டம் இன்று மதுரையில் நடந்தது. இதில், கையில் சிலம்புடன் கலந்து கொண்ட நடிகை குஷ்பு உள்ளிட்ட பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர். அவர்களை திருமண மண்டபத்தில் அடைத்து வைப்பதாக கூறி போலீசார் அழைத்துச் சென்றனர்.

கடைசியில், மதுரை ஆட்டு மகமை கட்டளை திருமண மண்டபத்தில் கொண்டு சென்று அடைத்தனர். அங்கு ஏற்கனவே நிறைய ஆடுகள் இருந்தன. அந்த மண்டப வளாகத்தில் குஷ்பு உள்ளிட்ட பா.ஜ.க.வினர் அடைக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான ஆடுகள் அருகில் அடைக்கப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசுவதாக பாஜக மகளிரணியினர் புகார் தெரிவித்துள்ளனர். பாஜகவினரும் இதுகுறித்து காவல்துறையினருடன் பேசி வருகின்றனர்.

பெண்களுக்கு அசௌகரியமாக இருந்தால் இடத்தை மாற்றுவதாக காவல்துறையினர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.