தமிழகத்தில் இன்று நடைபெற்றுவரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கள்ள ஓட்டுப் பதிவானதாக முதல் தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம்ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை குமலன்குட்டை பகுதியில் அரசு மாநகராட்சியில் 93ஆவது வாக்குச்சாவடியில்தான் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.
தினேஷ் என்பவர் வழக்கம்போலதன்னுடைய வாக்கைச் செலுத்தச் சென்றபோது, அவருடைய வாக்கை யாரோ ஒருவர் பதிவுசெய்துவிட்டது தெரியவந்தது.
உடனே அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் முறையிட்டார்.
தேர்தல் நடத்தும் அலுவலர் அர்பித் ஜெயினிடம் அவர் புகார் அளித்தார். அதையடுத்து, 49ஓ விதியின்படி சவால் வாக்காக அவர் வாக்களிக்கலாம் என்று தெரிவித்தார்.