அன்புமணி - ராமதாஸ் 
தமிழ் நாடு

ராமதாஸ், அன்புமணி வீடுகளுக்கு வெடி குண்டு மிரட்டல்!

Staff Writer

பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி வீடுகளுக்கு மர்ம நபரிடம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டுக்கும், சென்னை தியாகராயர் நகரில் உள்ள அன்புமணி வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இமெயில் மூலம் வந்த மிரட்டலையடுத்து தைலாபுரம் இல்லத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையில் வெடிபொருள்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.

வெடிகுண்டு மிரட்டல் வந்த இ - மெயில் ஐடி, எங்கிருந்து மிரட்டல் வந்தது, மிரட்டல் விடுத்த நபா் யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த வெடிகுண்டு மிரட்டலால் அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.