சட்டப்பேரவையின் இந்தக் கூட்டத்தொடர் வரும் 20ஆம்தேதிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவு அறிக்கை தாக்கலுக்குப் பின்னர் சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக் குழு இன்று கூடி இந்த முடிவை எடுத்துள்ளது.
நாளை புதன்கிழமை சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள், அண்மையில் மறைந்த கல்வியாளர் ச.சீ. இராஜகோபாலன், மகாராஷ்டிரத் துணைமுதலமைச்சர் அஜித் பவார் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். அதையடுத்து, இடைக்கால பொது நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை தொடர்பாக விவாதம் தொடங்கும்.
மறுநாள் வியாழன் அன்றும் பொது விவாதம் தொடரும்.
கடைசி நாளான வெள்ளியன்று விவாதத்துக்கான பதிலுரையும் முன்பண மானியக் கோரிக்கைகளும், கூடுதல் செலவினத்துக்கான முன்பண மானியக் கோரிக்கைகளும் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும்.
இவை தொடர்பான சட்டமுன்வடிவுகளும் நிறைவேற்றப்படும் என்றும் பேரவையின் செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.