கோடைக் காலங்களில் தூய்மைப் பணியாளர்களின் தாகத்தை போக்கவும் நீர்ச்சத்தை பரமாரிக்கவும் குளிர்ச்சியான மோர் வழங்கும் புதிய திட்டம் தொடங்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் அறிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு பட்ஜெட் கூட்டம் தொடங்கியது. அப்போது மேயர் பிரியா காலை 2026 - 2027 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:
* கோடை காலங்களில் தூய்மை பணியாளர்களுக்கு மோர் வழங்கப்படும்.
* சென்னை மெரினா கலங்கரை விளக்கம் முதல் அண்ணா நினைவிடம் வரை ரோப் கார் சேவை
* வீடு இல்லாதவர்களுக்கு ரூ.12 கோடி செலவில் தற்காலிக தங்கும் இடம் அமைக்கப்படும்
* ரூ.10 கோடியில் சென்னை பசுமை திட்டம் என்பது உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகின.