இடைத்தேர்தல் வாக்குப்பதிவு  
தமிழ் நாடு

மதுராந்தகம், தாராபுரம் – 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

Staff Writer

மதுராந்தகம், தாராபுரம் இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இன்று காலை 11 மணியளவில் பதிவாகியுள்ள வாக்களிப்பு நிலவரம் வெளியாகியுள்ளது.

இரு தொகுதிகளிலும் திட்டமிட்டபடி இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேலும், புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கும், மேற்கு வங்கத்தில் உள்ள 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், அசாமில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று காலை 11 மணி நிலவரப்படி மதுராந்தகத்தில் 35.55% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தாராபுரத்தில், 37.28% வாக்குகள் பதிவாகியுள்ளன.

புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் 39.16% வாக்குகள் பதிவாகியுள்ளன.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram