மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்கள் 
தமிழ் நாடு

இடைத்தேர்தல் - 2 கம்யூனிஸ்ட் வேட்பாளர்களும் அறிவிப்பு!

Staff Writer

அடுத்த மாதம் 6ஆம்தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தல் வேட்பாளர்களை கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன. 

மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் சுகந்தியும், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அக்கட்சியின் வட்டாரச் செயலாளர் இலட்சுமணனும் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.

சென்னையில் இன்று மாலையில் வேட்பாளர்களை அறிமுகம்செய்து, சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், சிபிஐஎம் பெ.சண்முகம், சிபிஐ எம்எல் லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி ஆகியோர் பேசினார்கள்.

இடது முன்னணி இவர்களுக்காகப் பிரச்சாரத்தில் ஈடுபடும் என்று மூன்று தலைவர்களும் தெரிவித்தனர்.