தமிழ் நாடு

'பாமகவில் இருந்து நாங்கள் விலகுகிறோம்'

Staff Writer

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தரப்பில் செயல்பட்ட முன்னாள் எம். எல்.ஏ. அருள் தலைமையில், 'ஒன்றுபடுவோம், ஒன்றிணைவோம்' என்ற பெயரில் சேலத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் எம்.எல்.ஏ. அருள் கூறியதாவது,

"பா.ம.க.-வில் இருந்து நாங்கள் விலகுகிறோம். ஒருபோதும் அன்புமணியை தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

தந்தை - மகனுக்கு ஏற்பட்ட விரிசலுக்குப் பிறகு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டதால்தான், அவருடன் இணைந்து நாங்கள் பணியாற்றினோம்.

ஆனால், தற்போது அதற்கான கதவு மூடப்பட்டுவிட்டது. என்றைக்குமே டாக்டர். ராமதாஸ்தான் என்னுடைய தலைவர்; எனக்கு அரசியலில் வாய்ப்பு கொடுத்து, ஆளாக்கிவிட்டவர் அவர்தான். அவரை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். ஆனால், அதற்காக அன்புமணியை ஒருபோதும் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டோம். பா.ம.க.வில் இருந்து நாங்கள் விலகுகிறோம்.

இனி ஒருபோதும், பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியை நாங்கள் பயன்படுத்த மாட்டோம்." என்று கூறினார்.