தமிழகத்தில் நீண்ட காலமாகக் கேட்கப்பட்டும் சாதிவாரி சர்வே மேற்கொள்ளப்படும் என விஜய் அரசாங்கம் ஆளுநர் உரையில் கூறியுள்ளது.
“ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதே உண்மையான சமூக நீதி என்பது இந்த அரசின் அடிப்படைக் கொள்கை. இந்தக் கொள்கை, வாக்குறுதியை நிறைவேற்ற சாதிவாரிக் கணக்கெடுப்பை மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் இணைந்து விரைந்து முடிக்க ஒன்றிய அரசை வலியுறுத்துவோம். ஒன்றிய அரசின் சாதிவாரிக் கணக்கெடுப்பு முடிந்தபின்னர் தமிழ்நாடு அரசு சமூகநீதி கணக்காய்வை நடத்தும்.” என்றும் ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.