தமிழகத்தின் பிரபல சமையல் கலை வல்லுநரும் உணவுக்கலைக் கல்லூரி முதல்வராகப் பணியாற்றியவருமான செஃப் தாமு என்ற தாமோதரன் இன்று காலமானார்.
உடல்நலக் குறைவால் சில நாள்களுக்கு முன்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
ஏற்கெனவே கடந்த செப்டம்பரில் இவரின் உடல்நிலை சற்று பாதிக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ச்சியாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருந்தார்.
மீண்டும் உடல் நலிவடைந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மறைந்த தாமுவுக்கு வயது 72.
நாற்பது ஆண்டுகளாக சமையல் கலையில் சிறந்து விளங்கிய இவர், ஜெயா தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். பின்னர் பல தொலைக்காட்சிகளிலும் சமையல் நிகழ்ச்சிகளை வழங்கிவந்த இவர், விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி மூலம் ஏராளமான இரசிகர்களைப் பெற்றார்.
மூத்த கலைஞரான இவரின் நிகழ்ச்சிக்கென்றே தனி இரசிகர் பட்டாளம் உருவானது.
இவரின் சமையல் கலை பணியைப் பாராட்டி மைய அரசு பத்மஸ்ரீ பட்டத்தையும் வழங்கியது.
அவரின் மறைவு ஏராளமானவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பல்வேறு தலைவர்களும் பிரபலங்களும் செஃப் தாமுவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.