தமிழ் நாடு

மதிமுக எம்எல்ஏ-வுக்கு 2ஆண்டுகள் சிறை...எச்சரித்த நீதிமன்றம்!

Staff Writer

மதிமுக எம்எல்ஏ சதன் திருமலைக்குமாருக்கு காசோலை மோசடி வழக்கில் விதித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக சதன் திருமலைக்குமார் உள்ளார். இவர், கடந்த 2016-ஆம் ஆண்டு, ஒரு தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடி ரூபாய் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்த தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்காக அவர் வழங்கிய இரண்டு காசோலைகள், போதுமான பணம் இல்லாததால் திரும்பி வந்தன.

இதன் காரணமாக, அந்த நிதி நிறுவனம் 2019ஆம் ஆண்டு சதன் திருமலைக்குமார் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் நேற்று (டிசம்பர் 30) ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யவதற்காக தண்டனையை 2 மாதங்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது.

இந்த கால அவகாசத்திற்குள், அவர் நிதி நிறுவனத்திற்குச் சேர வேண்டிய ஒரு கோடி ரூபாயை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தவறும் பட்சத்தில், இந்த இரண்டு ஆண்டுகளுடன் சேர்த்து மேலும் 3 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.