கறிக்கோழி  
தமிழ் நாடு

நீங்கள் சிக்கன் பிரியரா... ஜூலை 31 முதல் கோழிக்கறி கடைகள் மூடல்!

Staff Writer

கோழி வணிகர்கள் கூட்டமைப்பினர் வரும் ஜூலை 31ஆம் தேதி முதல் காலவரையற்ற கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

கறிக்கோழிகளை விற்பனைக்கு அனுப்புவதற்கு 15 மணி நேரம் முன்னரே, அவற்றுக்குத் தீவனம் வழங்குவதை நிறுத்த வேண்டும் உட்பட்ட நெறிமுறைகளை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கடையடைப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்னர்.

தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் கறிக்கோழி தீவனக் கட்டுப்பாடு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழகத்தில் உள்ள அனைத்து கால்நடைத்துறை அதிகாரிகளுக்கும் எடுத்துரைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கறிக்கோழி விற்பனைக்கு வரும் கோழிகளுக்கு 15 மணி நேரம் முன்னரே கோழி உற்பத்தியாளர்கள் தீவனம் வழங்க வேண்டும்; விற்பனைக்கு வருவதற்கு முன்னர் தீவனம் அளிப்பதால், சரியான எடையைவிட கூடுதலான எடைக்கு கோழிகள் விற்பனை செய்யப்படுகின்றன; தீவனங்கள் செரிக்காமல் கோழிகளின் உடலிலேயே தங்கி விடுகிறது. இதனை வெளியேற்றும்போது அது இறைச்சியை பாதிப்பதுடன், சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்படுத்துகிறது என்பன உட்பட்ட நெறிமுறைகளை கோழி உற்பத்தியாளர்கள் கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, காலவரையற்ற கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கோழி வணிகர்கள் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram