இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை தானும் ஏற்பதாக, கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கைக்கு இரு தேர்தல் ஆணையர்கள் பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவெடுத்ததற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியதாவது:
"இது ஒரு ஜனநாயக நாடு, சர்வாதிகார நாடு அல்ல. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை நானும் ஆதரிக்கிறேன்.
தகுதியுள்ள குடிமக்கள் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும். எஸ்.ஐ.ஆர். முறையில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எனினும், இதை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தக் கூடாது." என்று டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.