மொழிப்போர்க் களத்தின் முதற்கட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த நடராசன் – தாளமுத்து ஆகியோருக்கு சென்னை மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள அவர்களது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று வீரவணக்கம் செலுத்தினார்.
ஜனவரி 25- மொழிப்போர் வீரர்களின் வீரவணக்க நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
நடராசன் - தாளமுத்து சிலைகள் திறப்பு
1938-ஆம் ஆண்டு மொழிப்போர்க் களத்தின் முதற்கட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த நடராசன் – தாளமுத்து ஆகியோருக்கு சென்னை மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள அவர்களது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று வீரவணக்கம் செலுத்தினார். அப்போது வீரவணக்க முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மொழிப்போர் வீராங்கனை அன்னை தருமாம்பாளுக்கும் முதல்வர் ஸ்டாலின் நினைவஞ்சலி செலுத்தினார்.
சென்னை எழும்பூரில் அமைந்துள்ள தாளமுத்து நடராசன் மாளிகையில் ”தாளமுத்து- நடராசன்” திருவுருவச் சிலைகளையும் முதலமைச்சர்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில், முதலமைச்சர்
ஸ்டாலின் தலைமையில், ஊர்வலமாகச் சென்று சென்னை மூலக்கொத்தளத்தில் மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து – நடராசன், அன்னை தருமாம்பாள் நினைவிடங்களில் மரியாதைச் செலுத்தினோம்.
தமிழ்மொழி காக்க தன்னுயிர் தந்து ஆதிக்க இந்தியை விரட்டி அடித்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் சொல்லி முழக்கமிட்டோம்!
மும்மொழிக்கொள்கை என்று மீண்டும் முற்றுகையிடும் பாசிஸ்ட்டுகளுக்கும் – அவர்கள் பாதம் தாங்கும் அடிமைகளுக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாடம் புகட்டுவோம். இந்தித்திணிப்பை எந்நாளும் எதிர்ப்போம்! என பதிவிட்டுள்ளார்.