த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் இன்று நாமக்கல், கரூரில் பிரச்சாரம் செய்கிறார். நாமக்கல் கே.எஸ். திரையரங்கம் பகுதியில் விஜய் பேசவுள்ளார்.
இதற்காக, காலை 8.45 மணிக்கு சென்னையிலிருந்து தனி விமானத்தில் புறப்பட்டார். திருச்சிக்குச் சென்று அங்கிருந்து காரிலும் பரப்புரைப் பேருந்திலும் சென்று பேசும் இடத்தை அடைய இருக்கிறார்.
தற்போது, நல்லூர் எனும் இடத்தை விஜய்யின் பரப்புரை வண்டி கடந்துசெல்கிறது.
இதுவரை விஜய் பேசவுள்ள இடத்தில் திரண்டிருந்த மக்களில் ஐந்து பேர் கடும் வெயிலைத் தாங்கமுடியாமல் மயக்கம் அடைந்து விழுந்தனர்.
அவர்களை நோயாளர் அவசர ஊர்தியில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனிடையே, விஜய்யின் வாக அணியைப் பின்தொடர்ந்து இருசக்கர வண்டிகளில் சென்றவர்கள் நல்லூருக்கு முன்னால் சென்றபோது, சாலையில் வந்த இன்னொரு வண்டியுடன் மோதி விபத்து ஏற்பட்டது. அந்த வாகனத்தில் வந்த பெண்ணும் குழந்தையும் கீழே விழுந்து காயம் அடைந்தனர். அப்போது அந்த வழியாகச் சென்ற அவசர ஊர்தியை மறித்து அவர்களை விஜய் கட்சியினர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.