முதல்வர் விஜய் 
தமிழ் நாடு

நலம் டிஎன் இணையதளம்... அரசு மருத்துவமனைக்கு நன்கொடை தரலாம்!

Staff Writer

நலம் டிஎன் என்ற இணையதளத்தை சென்னை மாநிலக் கல்லூரி அரங்கில் முதல்வர் விஜய் இன்று திறந்து வைத்தார்.

இந்த இணையதளத்தின் மூலமாக கார்ப்பரேட் கம்பெனிகள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு நன்கொடை அளிக்கலாம்.

இந்தத் தளத்தில், எந்த அரசு மருத்துவமனைக்கு உதவ விரும்புகிறார்களோ அதை நன்கொடையாளர்களே தேர்வு செய்ய முடியும்.

அந்த மருத்துவமனைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள், படுக்கைகள், பரிசோதனை கருவிகள் முதலிய தேவைகளின் பட்டியலும் இடம்பெறும்.

நன்கொடைகள் வெளிப்படையான முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில், அதன் விவரங்களையும் இணையதளத்தில் கண்காணிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் 751 உதவி மருத்துவ அலுவலர்கள், 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கும் பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram