அப்பல்லோ மருத்துவமனைக்கு விரைந்துவந்த உதயநிதி  
தமிழ் நாடு

அப்பல்லோ மருத்துவமனையில் மு.க.ஸ்டாலின்!

Staff Writer

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

காலையில் வழக்கமான நடையின்போது அவருக்கு இலேசான தலைசுற்றல் இருந்ததாகவும் அதையொட்டி அவருக்கு சில மருத்துவ ஆய்வுகள் செய்வதற்காக அப்பல்லோவில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தந்தை அப்பல்லோவில் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரின் மகன் உதயநிதி ஸ்டாலினும் மருத்துவமனைக்கு விரைந்தார்.