பண்ருட்டி ரீல்ஸ் சிறுவர்கள் ஜீவா, தேவா 
தமிழ் நாடு

ரீல்ஸ் சிறுவர்களை அழைத்து முதல்வர் ஸ்டாலின் எடுத்த ரீல்ஸ்!

Staff Writer

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டு பிரபலமாக இருக்கும் சிறுவர்களை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வரவழைத்துப் பாராட்டியுள்ளார். 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த இந்த சகோதரர்கள், அவர்களின் பெற்றோருடன் தலைமைச்செயலகத்தில் முதலமைச்சரைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கோட்டைக்கு வந்த சிறுவர்களை முதலமைச்சர் வரவேற்று உரையாடினார். 

அவர்களின் ரீல்சில் கல்வியை மையப்படுத்திய ஒரு காணொலிக்காக முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

எத்தனையோ பேர் ரீல்ஸ் வெளியிட்டாலும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததற்காக உங்களைப் பாராட்டுகிறேன் என அவர்களிடம் முதல்வர்  குறிப்பிட்டுச் சொன்னார். 

இருவரின் படிப்பு, பள்ளி வசதிகள் பற்றி முதலமைச்சர் அவர்களிடம் கேட்டார். 

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேசும் இடையில் வந்து உரையாடலில் பங்கேற்றார். காலை உணவு பற்றியும் திறன்பலகை வகுப்பறை பற்றியும் அமைச்சர் அவர்களிடம் கேட்டறிந்தார். 

நிறைவாக, இச்சந்திப்பை முன்னிட்டும் சிறுவர்கள் ஜீவா,தேவா முதலமைச்சரை ரீல்ஸ் எடுக்கவைத்தனர். அதில் அவரையும் பேசவைத்தனர். 

இச்சந்திப்புக் காணொலியை முதலமைச்சர் தன் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.