தமிழ் நாடு

ஆக்ஸ்போர்டில் 2 ஆங்கில நூல்களை வெளியிட்ட முதல்வர்!

Staff Writer

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டுக் கருத்தரங்கில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு ஆங்கில நூல்களை வெளியிட்டார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில்,

”தந்தை பெரியார் நிகழ்த்திக் காட்டியதெல்லாம் ஆயுதமேந்தாத - இரத்தம் சிந்தாத புரட்சிகள். ஒரு சீர்திருத்தவாதி, தான் பரப்புரை செய்த கருத்துகள் எல்லாம் அரசாணைகளாக மாறிச் செயல்வடிவம் பெறுவதைக் கண்ட பெருமை தந்தை பெரியாருக்கே உரியது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பெரியாரின் சிந்தனைகள் - போராட்டங்களை உலகம் முழுதும் கொண்டுசெல்லும் வகையில், வரலாற்றாய்வாளர்  ஆ.இரா.வெங்கடாசலபதி, முனைவர் கார்த்திக் ராம் மனோகரன் ஆகியோர் தொகுத்துள்ள The Cambridge Companion To Periyar தி கேம்பிரிட்ஜ் கம்பேனியன் டு பெரியார் எனும் நூலையும்

பெரியார் தொடங்கிய சமூக இயக்கத்தில் இருந்து வெகுசன மக்கள் இயக்கமாகக் கிளைத்த தி.மு.கழகம் ஆட்சியைப் பிடித்து, தமிழ்நாட்டின் போக்கையே மாற்றியமைத்த புரட்சி வரலாற்றை, இளம் ஆய்வாளரான முனைவர் விக்னேஷ் கார்த்திக் ஆய்வுநடையில் வெளிப்படுத்தியுள்ள தி திரவிடியன் பேத்வே The Dravidian Pathway எனும் நூலையும் அவர் வெளியிட்டார்.