தமிழ் நாடு

தில்லியில் புதிய ஊரக வேலைத் திட்டத்தை ஏற்றுக்கொண்ட விஜய்!

Staff Writer

மாநில அரசின் ஊரக வீட்டுவசதித் திட்டங்களுக்கும், ஒன்றிய அரசின் வளர்ச்சியடைந்த இந்தியா - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்திரவாதத் திட்டத்தின் (கிராமப்புறம்) (VB-G RAM-G) கீழ் வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என தில்லியில் இன்று நடைபெற்ற நிதிஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பேசினார். 

கடந்த ஜனவரியில் இந்தப் புதிய ஊரக வேலைத்திட்டம் கொண்டுவரப்பட்டு மாற்றங்கள் செய்யப்பட்டதை எதிர்த்து அப்போதைய தி.மு.க. அரசு சட்டமன்றத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியது. 

அந்த நிலைப்பாட்டுக்கு மாறாக, விஜய் அரசு இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது.