முதல்வர் விஜய் 
தமிழ் நாடு

5,000 பெண் காவலர்கள் உட்பட 10 ஆயிரம் போலீஸ் நியமனம்!

Staff Writer

சட்டப்பேரவையில் காவல் துறை, தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறைகளுக்கான அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் இன்று வெளியிட்டார்.

அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

1)      மாநிலத்தில் உள்ள காவல் நிலையங்களில் 29,108 கூடுதல் காவலர் பணியிடங்கள் படிப்படியாக அடுத்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்படும். தமிழ்நாடு காவல் படையில் இவ்வாண்டில் 5,000 பெண் காவலர்கள் உட்பட மொத்தம் 10,000 காவலர்கள் நியமிக்கப்படுவர்.

2)      செயற்கை நுண்ணறிவு, நவீன டிஜிட்டல் தடவியல், நிகழ்நேர கண்காணிப்பு அமைப்பு, நவீன தகவல் தொடர்பு-கட்டுப்பாட்டு மையங்கள் உருவாக்கப்பட்டு ரூ. 212 கோடியில் காவல்துறை நவீன தகவல் நவீனமயமாக்கப்படும்.

3)      பணியின்போது துணிச்சலுடன் பணியாற்றி உயிரிழந்த காவல் துறையினரின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ. 1 கோடி வழங்கப்படும்.

4)      சேலம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் புதிய மரபணு ஆய்வுப் பிரிவுகள் ரூ. 14 கோடி செலவில் நிறுவப்படுமு்.

5)      சென்னை, தஞ்சாவூர், சேலம், காஞ்புரம், சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் ரூ.16 கோடி செலவில் புதிய தீயணைப்பு – மீட்புப் பணிகள் நிறுவப்படும்.

6)      தீயணைப்பு – மீட்புப்பணிகள் துறையில் புதியதாக பெண் தீயணைப்பு வீரர்கள் பணியமர்த்தப்படுவார்கள். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram