மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரச்சாரம் 
தமிழ் நாடு

தோற்றாலும், ஜெயித்தாலும் ஸ்டாலின் எனக்கு ஸ்வீட் அங்கிள் - முதல்வர் விஜய்

Staff Writer

மதுராந்தகம் இடைத்தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்வர் விஜய் பிரச்சாரம் செய்தார்.

முன்னதாக, மதுராந்தகம் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், பிரச்சாரம் நடக்கும் இடத்திற்கு சென்ற அவர் அங்கு பேசியதாவது:

"மதுராந்தகத்துக்கு முதல்வராக வரவில்லை. பிரசாரத்துக்காக உங்கள் வீட்டுப் பிள்ளையாக வந்துள்ளேன். உங்கள் விஜய் ஆட்சிக்கு வரக் கூடாதா? லஞ்சத்தை ஒழிக்க, பெண்கள் பாதுகாப்புக்காக உங்கள் விஜய் ஆட்சிக்கு வரக்கூடாதா?

தி.மு.க. நம்மைப் பற்றி நாள்தோறும் ஆபாசமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு மறைமுகமாக அ.தி.மு.க. பலர் ஆதரவாக இருக்கிறார்கள்.

தி.மு.க.வுடன் இணைந்து அ.தி.மு.க. ஆட்சி அமைக்க முயலும்போதே அவர்கள் முகமுடி கிழிந்துவிட்டது.

நீங்கள் விசில் சின்னத்துக்கு வாக்களிப்பது, பெண்களை ஆபாசமாகப் பேசுபவர்களுக்கு கொடுக்கும் மிகப்பெரிய தண்டனை.

ஸ்டாலின் பாவம், தேர்தலில் தோற்றுவிட்டார், எதிர்க்கட்சித் தலைவராகக்கூட இல்லை என்கிறார்கள், அவர் தோற்றாலும் ஜெயித்தாலும் எனக்கு ஸ்வீட் அங்கிள். 

தமிழ்நாட்டில் த.வெ.க. அரசும் கடன்தானே வாங்குகிறது என்று குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகளுக்கு சொல்வது என்னவென்றால், த.வெ.க. அரசு கடன்தான் வாங்குகிறது. ஆனால் வளர்ச்சிக்காகத்தானே தவிர, கொள்ளையடிக்க இல்லை.

தி.மு.க.வும், பா.ஜ.க.வும் வேறு வேறு இல்லை. தமிழ்நாட்டில் இருக்கும் தி.மு.க.வுக்கு பெயர் பா.ஜ.க." என்று முதல்வர் விஜய் பேசினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram