நடிகர், கார் பந்தய வீரர் அஜித் குமாரின் தாயார் மோகினி அம்மையார் மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 83.
அவரின் மறைவிற்கு
முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
”அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார்
திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று விஜய்யின் இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.