குழந்தைகளுக்கு முதல்வர் விஜய் கேக் வழங்கினார் 
தமிழ் நாடு

குழந்தைகளுக்கு கேக்கும் பிரியமுடன் விஜய் வாழ்த்து அட்டையும்!

Staff Writer

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு கேக் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கிவைத்தார்.

நாளை குழந்தைகள் தின விழா என்பதால், இன்றே தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என மொத்தம் 61,84,566 பேருக்கு கேக் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்காக ரூ. 9.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சென்னை, கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அரசுப் பள்ளிக்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய், மாணவர்களுக்கு கேக், வாழ்த்து அட்டைகளை வழங்கினார்.

முதல்வர் விஜய் வழங்கிய வாழ்த்து அட்டை

குழந்தைகளுக்கு கேக்குடன் முதலமைச்சர் விஜய் வழங்கிய வாழ்த்து அட்டையில் 'ஆல் இஸ் வெல், கான்பிடண்டா இருங்க, பிரியமுடன் விஜய்' என்ற வரிகள் இடம் பெற்று இருந்தன. வாழ்த்து அட்டையின் பின்புறம், மாணவர்களுக்கான கால அட்டவணை இடம் பெற்றிருந்தது.

மேலும், அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு இன்று சர்க்கரைப் பொங்கல் வழங்கப்படுகிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram