தமிழ் நாடு

வாகனத்தை ஓட்டிப் பார்த்த முதல்வர் விஜய்!

Staff Writer

மருத்துவம் - ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் பயன்பாட்டிற்காக 2.90 கோடி ரூபாய் செலவில் 40 புதிய வாகனங்கள் வழங்கும் நிகழ்வு தலைமைச்செயலகத்தில் இன்று காலையில் நடைபெற்றது.

முதலமைச்சர் விஜய் அந்த வாகனங்களுக்கான சாவிகளை ஒட்டுநர்களுக்கு வழங்கினார்.

அப்போது, அந்த வாகனங்களில் ஒன்றை நானே இயக்கிப் பார்க்கிறேன் என முதலமைச்சர் சாவி வாங்கி வண்டியை ஓட்டத் தொடங்கினார். 

திடீரென அவர் செய்த இச்செய்கையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாவலர்கள் வண்டியின் பின்னாலேயே ஓடினார்கள். 

பின்னர், முதலமைச்சர் வண்டியைவிட்டு இறங்கி பணிகளைத் தொடர்ந்தார். 

முன்னதாக, கிண்டியில் உள்ள அயோத்திதாசர் சிலைக்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று மலர் மரியாதை செய்தார்.