மாற்றுத்திறனாளியின் கோரிக்கையை முதல்வர் விஜய் நிறைவேற்றினார் 
தமிழ் நாடு

ஒரே நாளில் மாற்றுத்திறனாளிக்கு விஜய் ஒப்பந்த வேலை!

Staff Writer

வேலைவாய்ப்பு கேட்டு கோரிக்கை விடுத்த ஒரே நாளில் பணி நியமன ஆணையை வழங்கினார் முதலமைச்சர் விஜய்.

நேற்று சென்னை கிண்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு, தொழில்துறைக்கான நவீன மின் ஆய்வகங்களை முதலமைச்சர் விஜய் திறந்துவைத்தார்.

பின்னர், அங்கிருந்த மாணவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி மாணவர் வீ. தினேஷ், தனக்கு வேலைவாய்ப்பு வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சரிடம் சைகையால் உணர்த்தினார்.

மேலும், மாற்றுத்திறனாளி மாணவர் மனு ஒன்றையும் முதலமைச்சரிடம் வழங்கினார்.

இந்த மனு குறித்து உடனடியாக பரிசீலித்த முதலமைச்சர் விஜய், அந்த மாற்றுத்திறனாளி மாணவருக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வாயிலாக, திருவொற்றியூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உதவியாளர் பணிக்கான ஆணையை வழங்கினார்.

அரசு, பொதுத் துறை நிறுவனங்களில் தனியார் மூலம் எடுக்கப்பட்ட வேலையை இனி அரசின் ஓவர்சீஸ் மனிதவள நிறுவனத்தின் ஒப்பந்தம் மூலம் பணியமர்த்த அரசாணை வெளியிடப்பட்டது, சர்ச்சைக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram