சிவாஜி கணேசன் - முதலமைச்சர் விஜய் 
தமிழ் நாடு

'தலைமுறை கடந்து நிற்கும் தமிழ்ப் பெருமை சிவாஜிகணேசன்'

Staff Writer

நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் சமூக ஊடகப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், " தனது நிகரற்ற நடிப்பாற்றலாலும், கம்பீரக் குரலாலும், ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டி, திரையுலகின் இமயமாய் திகழ்ந்து, உலகத் தமிழர்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பிடித்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாளில் அவரது மகத்தான கலைப்பணியை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்.

வரலாற்று நாயகர்கள், புராண மாந்தர்கள், சமூகத்தின் எளிய மனிதர்கள் என அனைத்து கதாபாத்திரங்களையும் தன் அசாத்திய நடிப்பால் நம் கண்முன்னே நிறுத்தி, தமிழின் செழுமையையும் பெருமையையும் திரைப்படங்களின் வழியே உலகறியச் செய்து நடிப்பிற்கு இலக்கணமாய் திகழ்ந்தவர்.

அன்பு, பாசம், வீரம், கோபம், சோகம் போன்ற மானுட உணர்வுகளின் பரிமாணங்களைத் தனது நடிப்பால் வெளிப்படுத்திய நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் கலையுலகச் சாதனைகள் தலைமுறைகளைக் கடந்தும் தமிழ் மண்ணின் பெருமையாக என்றும் நிலைத்திருக்கும்!" என்று விஜய் கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram