சுதந்திர தின விழா கொண்டாட்டம்  
தமிழ் நாடு

கோட்டையில் கொடி ஏற்றிய விஜய்... விஐபி வரிசையில் திரிஷா!

Staff Writer

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார்.

இந்தியாவின் வளர்ச்சி, இளைஞர்களின் பங்கு உட்பட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பேசினார்.

தமிழகத்தின் 80-வது சுதந்திர தின விழா சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்றது.

முதலமைச்சர் விஜய் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் கோட்டையில் தேசியக் கொடியேற்றுவது இதுவே முதல்முறை ஆகும்.

விஜய்யின் பெற்றோருக்கு அருகில் நடிகை திரிஷா மிக முக்கிய பிரமுகராக சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram