தமிழ்நாட்டில் உள்ள ஒரு இலட்சம் ஏரிகளைத் தனியார் பராமரிக்க முதலமைச்சர் விஜய் இன்று புதிய திட்டத்தைத் தொடங்கிவைத்துள்ளார். இதற்காக ஐந்து துறைகளைச் சேர்ந்த ஒரு இலட்சம் ஏரிகளும் ஒரே இணையதளத்தில் விவரமாக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, அரசுப் பேருந்துகளை இயக்கி, பராமரிப்பதற்கு தனியாரிடம் விடும் பணி சென்னையில் மூன்றில் ஒரு பங்காக மும்முரம் அடைந்துள்ளது.
மின்வாரியத்திலும் மதுக்கடைகளிலும் தனியாருக்கு விடுவதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டு வருவதாக உரிய துறை அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகளைப் பராமரிக்கும் பணியைத் தனியாரிடம் விட கொள்கை முடிவு எடுக்கப்பட்டு அதிரடியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.